"பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்" -குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு
மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பதாக குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் நிறுவன தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பொறியியல் மாணவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தியாவை அறிவு மற்றும் கல்வி மையமாக உருவாக்க வேண்டும் எனக் கூறிய வெங்கையா நாயுடு, தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் ஒரு முக்கிய காரணியாகும் என அவர் தெரிவித்தார்.
Comments